சீன அதிபருடன் இலங்கை ஜனாதிபதி பேச்சுவார்த்தை
சீனா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தனது பயணத்தின் துவக்கத்திலேயே சீன அதிபர் ஸீ ஜின் பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ...


கடந்த ஜனவரியில் பதவியேற்றதற்கு பின்னர் முதல் தடவையாக சீனா செல்லும் ஜனாதிபதி சிறிசேன, நூறு கோடி டாலர்கள் மதிப்புடைய இருதரப்பு ஒப்பந்தங்களில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
துறைமுக நகரம் அமைப்பது போன்ற திட்டங்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் வகுக்கப்பட்டிருந்தன.
ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அச்சங்கள் காரணமாக துறைமுக நகரத் திட்டம் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தகுதி அடிப்படையிலேயே சீனாவுக்கு இந்த ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன என்றூம் ஊழல் இல்லை என்றும் சீன செய்தித்தாள் ஒன்று தலையங்கம் எழுதியுள்ளது