அரசு பத்திரங்களில் ராஜபக்சே கையெழுத்து
இலங்கையின் யாழ்ப்பாண மாகாணத்தில் அரசு நிலங்களில் குடியிருந்த 191 தமிழர்களுக்கு, புதன்கிழமை வழங்கப்பட்ட வீட்டுமனை பத்திரங்களில் முன்னாள் அதி...


புதிய அதிபர் சிரிசேனா மேற்கொண்ட நடவடிக்கைகளின்படி அரசு நிலங்களில் வசிக்கும் தமிழர்களுக்கு,வீட்டுமனை பத்திரங்களை வழங்க அவர் அண்மையில் உத்தரவிட்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள நான்கு பிரதேச சபைகளில் உள்ள சுமார் 191 பேருக்கு நில உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. இந்த நில உறுதிப் பத்திரங்களில்முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் புகைப்படம் மற்றும் கையெழுத்தும், வீட்டுமனை பத்திரத்தில் இருந்ததற்கு பொதுமக்கள் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.உடனடியாக அவற்றை மாற்றி புதிய அதிபரின் கையெழுத்துடன் கூடிய பத்திரங்கள் வழங்குமாறு கோரிக்கையும் விடுத்துள்ளனர்.