கோத்தபாயவின் விசுவாசியை தம்பி என அழைத்ததால் கும்பலாக தாக்கிய இராணுவத்தினர்
இராணுவத்தினரால் நடத்தப்படும் உணவு விடுதிக்கு சென்ற நபர் ஒருவர், அங்குள்ள ஒருவரை தம்பி என அழைத்தமையால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இந்த...


இந்த சம்பவம் கடந்த 27ம் திகதி பலாங்கொட, நன்பெரியல் என்ற பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
உணவு வாங்கச் சென்ற ஒருவர், சிவில் உடையில் இருந்த இராணுவ அதிகாரி ஒருவரையே தம்பி என அழைத்துள்ளார்.
இவ்விடுதியை நடத்தி செல்கின்ற இராணுவத்தின் உயர் அதிகாரியான மேஜர் ஒருவர் குறித்த நபரை திட்டியதோடு 15 அடங்கிய இராணுவ குழுவனரால் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
இதன் போது “நாங்கள் யார் என உனக்கு தெரியுமா? நாங்கள் கோத்தாவின் ஆட்கள், உங்களுடைய ஆட்டம் எல்லாம் ஓகஸ்ட் 17 வரை மாத்திரமே” என மேஜர் திட்டியுள்ளார்.
பின்னர் தாக்குதலுக்குள்ளான குறித்த நபர் இது தொடர்பில் பலாங்கொட பொலிஸாருக்கு முறைபாடு செய்துள்ளார்.
அதனை தொடர்ந்து அவ்விடத்திற்கு வந்த பொலிஸாருக்கும் திட்டியதோடு உங்கள் அனைவரையும் 17ஆம் திகதிக்கு பின்னர் பார்த்துக்கொள்கின்றேன் என கூறியுள்ளார்.
இவ்வாறான நிலைமையினுள் அரசியல் ரீதியில் வன்முறையான சூழ்நிலையை உருவாக்குவதற்காக இது போன்ற குழுக்கள் திட்டமிட்டு செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.