எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதாக மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தமது சொந்த ஊரான ம...


தமது சொந்த ஊரான மெதமுலன்னையில் வைத்து இன்று முற்பகல் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
பொதுமக்களின் கோரிக்கையை நிராகரிப்பதற்கு தமக்கு உரிமையில்லை என்ற அடிப்படையிலேயே இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே அங்கு பௌத்த நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் கொழும்பில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையிலான வாகன பேரணி சென்றடைந்த பின்னர் இந்த அறிவிப்பை மஹிந்த ராஜபக்ச விடுத்தார்.
எனினும் நேற்று தமக்கு இடம்தருவதாக கூறப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலா? அல்லது வேறு கட்சியிலா? இணைந்து போட்டியிடப்போகிறார் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை.
ஐக்கிய தேசியக்கட்சியின் கடந்த 100 நாள் ஆட்சியின் போது நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியதாக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் இருந்த பல முகாம்கள் அகற்றப்பட்டன. மத்திய வங்கியில் முறிக்கொள்வனவு மூலம் 5000 கோடி ரூபா பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது. இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதமர், தாம் முன்னர் விடுதலைப்புலிகளுடன் செய்துக்கொண்ட உடன்படிக்கையை போன்று மீண்டும் ஒரு யுகத்தையே விரும்கிறாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை போரை வெற்றிக்கொண்டு இலங்கையில் இருந்து பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டது. எனினும் போரினால் இறந்த, பாதிக்கப்பட்ட பயங்கரவாதிகளுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இது நிறைவேற்றப்பட்டிருந்தால் பயங்கரவாதிகளுக்கு நட்டஈடு வழங்கிய முதல்நாடு இலங்கையாகவே இருந்திருக்கும் என்று மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.
இரண்டாம் இணைப்பு
பெரும்பலான மக்களின் முடிவுக்கு நான் தலைவணங்கிய விதத்தை நீங்கள் அறிவீர்கள். நான் அனைத்து பதவிகளை வகித்துள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
7 தினங்களுக்குள் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை கையளித்தேன். நான் மாநாடு ஒன்றின் மூலம் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டேன். அதற்கு 6 மாதங்கள் ஆனது.
எந்த சந்தர்ப்பத்திலும் எப்போதும் நான் கட்சிக்கு எந்த துரோகத்தையும் செய்யவில்லை. கடந்த ஆறு மாதங்களாக நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் சட்டத்திற்கு புறம்பாக பல நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அரச ஊழியர்களுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுவதுடன் அவர்கள் நடு தெருவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். 100 நாட்களுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடுகளை கொண்டுள்ள நபர்களை பழிவாங்கினர். நாட்டின் அபிவிருத்தி முற்றாக நின்று போயுள்ளது.
அரசியல் பகையையும் பழிவாங்கல்களையும் நாங்கள் குப்பையில் வீசினோம். அரசியலமைப்புக்கு வெளியில் நாம் எதனையும் செய்யவில்லை. நீதிமன்றத்தை அவமதிக்கவில்லை. நாங்கள் குப்பையில் வீசியவற்றை இவர்கள் மீண்டும் கையில் எடுத்துள்ளனர்.
நீங்கள் இங்கு வந்து என்னை அழைப்பது பழிவாங்க அல்ல. நாட்டை கட்டியெழுப்ப. அன்று நுகேகொடையில் ஆரம்பித்த செயற்பாடுகள் இன்று மாபெரும் சக்தியாக மாறி என் வாசலுக்கு வந்துள்ளது.
நீங்கள் விடுக்கும் கோரிக்கையை நிராகரிக்கும் உரிமை எனக்கில்லை. நாட்டுக்காக எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாம் போட்டியிட வேண்டும்.
நிறுத்தப்படடுள்ள சகலவற்றையும் கட்டியெழுப்ப எமது அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த முக்கிய பயணத்தில் என்னை கைவிடாத அனைவருக்கும் தலைவணங்குகிறேன் எனவும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.