ஈபிள் கோபுரத்தை கண்காணித்த ஆளில்லா விமானம்
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகரில் அல்ஜசீரா தொலைக்காட்சி நிலையம் உள்ளது. இங்கு பணியாற்றும் 3 பேர் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் ...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_478.html

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகரில் அல்ஜசீரா தொலைக்காட்சி நிலையம் உள்ளது. இங்கு பணியாற்றும் 3 பேர் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் ஈபிள் கோபுரம் அமைந்த பூங்காவின் வெவ்வேறு பகுதிகளில் அமர்ந்திருந்தனர்.
ஈபிள் கோபுரத்தை சுற்றி ஆளில்லா விமானம் மூலம் அவர்கள் பாரீஸ் நகரின் பல்வேறு பகுதிகளை கண்காணித்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஆளில்லா விமானத்தை இயக்கிக் கொண்டிருந்தார். மற்றொருவர், விமானத்தில் பொருத்தப்பட்ட கெமரா மூலம் படம்பிடித்தார். மூன்றாவது நபர், அப்பகுதிகளை தொடர்ந்து கண்காணித்தபடி இருந்தார் என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் பாரீஸ் நகர பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் ஈபிள் கோபுரத்தை தொலைக்காட்சி நிலையத்தை சேர்ந்த 3 பத்திரிகையாளர்கள் எதற்காக படம்பிடித்து வருகின்றனர் என்று பிரான்ஸ் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, பொலிஸார் அல்ஜசீரா தொலைக்காட்சியை சேர்ந்த 3 பத்திரிகையாளர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக அவர்களது நடவடிக்கைகள் இருப்பதாக நிரூபிக்கப்பட்டால், அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரான்ஸ் அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate