மேர்ஸ் வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
தென்கொரியாவில் மேர்ஸ் வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்வடைந்துள்ளது. தென்கொரியாவில் மேர்ஸ் வைரஸ் தாக்கத்திற்கு 17...

http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_196.html

தென்கொரியாவில் மேர்ஸ் வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்வடைந்துள்ளது.
தென்கொரியாவில் மேர்ஸ் வைரஸ் தாக்கத்திற்கு 172 பேர் உள்ளாகியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான 95 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 50 பேர் சிகிச்சைகளின் பின்னர் வெளியேறியுள்ளதாகவும் அந்த நாட்டு சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சவூதி அரேபியாவிற்கு அடுத்ததாக தென்கொரியாவிலேயே அதிகளவான மேர்ஸ் வைரஸ் தாக்கத்திற்குள்ளானவர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.