மக்களின் நிதியை, அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம்
மக்களின் நிதியை, அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமென அமைச்சர் கயன்ந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்...


பத்தேகமவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.
சிறுதேயிலை தோட்ட உரிமையார்களுக்கான மானியம் வழங்குவதற்காக இந்த நிகழ்வு நேற்று நடைபெற்றது.
நல்லாட்சியின் கீழ், துஷ்பிரயோகம், மோசடி, அரச பணத்தை கொள்ளையிடல் என்பவற்றை நிறுத்துவதற்கே, மக்கள் ஆணையை வழங்கினார்கள். அவ்வாறு நடவடிக்கைகள் இடம்பெறும் பட்சத்தில் அவற்றை கண்ணை மூடி, பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என கருத்துத் தெரிவித்த இவர் மக்களின் ஆணைக்கமைய அவர்களின் பணத்தை உரிய முறையில் அபிவிருத்தித் திட்டங்களுக்கு பயன்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.