சந்திரிக்கா தலைமையில் மஹிந்த எதிர்ப்பு அணி
சுதந்திரக் கட்சியூடாகவோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊடாகவோ மஹிந் ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட மாட்டார் என நேற்றைய தினம்...


சுதந்திரக் கட்சியூடாகவோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊடாகவோ மஹிந் ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட மாட்டார் என நேற்றைய தினம் ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ள போதிலும் மஹிந்த ராஜபக்சவுக்கு அக்கட்சிகள் ஊடாக போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படாது என தெளிவுபடுத்தப்படவில்லை என்பதால் அதிருப்தியுற்றிருக்கும் மைத்ரி ஆதரவு அணியை ஒன்றிணைத்து வழி நடத்தும் பொறுப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீண்டும் மஹிந்த ராஜபக்ச வேட்பாளராக அங்கீகரிக்கப்பட்டால் குறித்த அணி தனியாக அன்னச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான ஆயத்தங்களுடனேயே தற்போது ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது எனவும் இன்று தான் எந்தக் கட்சியூடாக தேர்தலில் போட்டியிடுவது என மஹிந்த ராஜபக்ச அறிவிக்காதமையானது அவரும் தொடர்ந்து முயற்சி செய்து வருவதையே எடுத்துக்காட்டுவதாகவும் குறித்த தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை யானைச் சின்னத்தில் தனியாகப் போட்டியிடுவதற்கான தீர்மானம் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் ஜாதிக ஹெல உறுமய உட்பட ஏனைய கட்சிகள் அன்னச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான இரண்டாவது யோசனையுடன் ஜனாதிபதியின் தெளிவுக்காகக் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.