உலகின் செல்வந்தர்களுள் ஒருவரான சவுதி அரேபிய இளவரசர் அல்வலீத் பின் தலால், 32 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான தனது சொத்து முழுவதையும் தர்மம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
கால எல்லை அறிவிக்கப்படவில்லையாயினும், தமது சொத்துக்கள் அனைத்தும் பெண்கள் உரிமை, சுகாதார சேவைகள் உட்பட்ட பல்வேறு தொண்டு சேவைகள் ஊடாக செலவு செய்யப்படும் என அவர் அறிவித்துள்ளமையும், உலகின் பிரபலம் வாய்ந்த ட்விட்டர் சமூக வலைத்தளம், யூரோ டிஸ்னி நிறுவனம் உட்பட பிரபல நிறுவனங்களில் அவருக்கு பங்கு இருப்பதும் உலகில் செல்வாக்கு மிக்க செல்வந்தர்களுள் அவரும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சவுதி அரேபியா போன்ற நாடுகளில் பெரும்பாலும் ரமழான் நடுப்பகுதியில் தமது (சதக்கா) தர்ம காரியங்களைத் தீர்மானிக்கும் வழக்கமும் பேணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.