மைத்திரியின் ஆட்சியைக் கவிழ்க்க கறுப்பு பணத்தை செலவிடும் மகிந்த
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பினர் கறுப்பு பணத்தை நீர்போல் செ...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_78.html

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பினர் கறுப்பு பணத்தை நீர்போல் செலவிட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் புதிய அரசாங்கத்தில் பதவிகளை ஏற்றுக்கொண்டதால், மகிந்த ராஜபக்சவின் அதிகார பேராசை கனவு கலைந்து போயுள்ளது.
இதனால், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட ஒப்பந்தகாரர்களை இணைத்து கொண்டு மைத்திரி அரசாங்கத்தை வீழ்த்த கறுப்பு பணத்தை கொட்டி வருவதாக தெரியவருகிறது.
இந்த பணிகள் மகிந்த ராஜபக்சவின் பிரபல ஒப்பந்தகாரர்கள் இருவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
இவர்கள் தமது பணிகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கத்தில் அண்மையில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டவர்களிடம் பேரம் பேசும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sri Lanka Rupee Exchange Rate