வெலே சுதாவிடம் பணம் பெற்ற நடிகைகள் தொடர்பான தகவல்கள் அம்பலம்
சர்வதேச போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள வெலே சுதா என்ற சமந்த குமாரவிடம் பணத்தை பெற்ற 6 பிரபல நடி...


வெலே சுதாவுக்கும் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையிலான நிதி கொடுக்கல் வாங்கல்களை குறித்த நடிகைகளே மேற்கொண்டு வந்துள்ளனர்.
இதற்காக இந்த நடிகைகளின் பெயர்களில் வங்கி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன் அவர்களின் பெயரில் வாகனங்கள், காணிகள் என்பனவும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
இது குறித்த இரகசியத்தை பாதுகாக்க நாடாளுமன்ற உறுப்பினர், நடிகைகளுக்கு மாதாந்தம் மில்லியன் கணக்கில் பணத்தை வழங்கி வந்துள்ளார்.
சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வெலே சுதாவுக்கும் இடையில் நேரடி கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றதை திணைக்கள அதிகாரிகளினால் இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அந்த 6 நடிகைகளும் வெலே சுதா யார் என்பதை அறிந்திருக்கவில்லை. எனினும் வெளிநாட்டு பயணங்களின் போது வெலே சுதா யார் என்று தெரியாமல் அவருடன் தங்கியிருந்துள்ளனர்.
இந்நிலையில், வெலே சுதா கைது செய்யப்பட்ட பின் அவரது புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாதை அடுத்து நடிகைகள் அவரை அறிந்து கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.