சீனாவுடனான உறவில் மாற்றமில்லை: அரசு உறுதி
இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையில் தற்போது காணப்படும் உறவில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது என அரசாங்கம் உறுதிளயித்துள்ளது. முதலீட்டு ஊக்குவிப...

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் ஹாசீம் மற்றும் இலங்கைக்கான பதில் சீன தூதுவர் ரென் பெக்கியங் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போதே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் எவ்வித பாதிப்புக்களும் மாற்றங்களும் ஏற்படாது என அமைச்சர் கபீர் ஹாசீம் உறுதியளித்துள்ளார்.
அத்துடன் இலங்கையில் சீனா மேற்கொண்டுள்ள சகல அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் மீளாய்வு செய்யப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இந்த திட்டங்களை வெகுவிரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
