தினமும் 50 ராணுவ வீரர்களுடன் உறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தினர்: இரண்டாம் உலகப்போரில் பாதிக்கப்பட்டவரின் கண்ணீர் கதை
இரண்டாம் உலகப்போரின் போது தினமும் 50 ஜப்பானிய ராணுவ வீரர்களுடன் உறவு வைத்துகொள்ள கட்டாயப்படுத்தப்பட்டதாக பாலியல் அடிமையாக நடத்தப்பட்ட மு...


தென் கொரியாவை சேர்ந்தவர் லீ ஒக் சியோன்(Lee Ok Sean 87). இவர் கடந்த இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானிய ராணுவ வீரர்களால் பாலியல் அடிமையாக நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, எனது 15 வயதில் நான் ஜப்பானிய ராணுவ முகாமில் விபச்சாரத்தில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டேன். என்னோடு ஏராளமான சிறுமிகள் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர்.
மேலும் நான் தினமும் 50 ஜப்பானிய ராணுவ வீரர்களுடன் உறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
முகாமில் இருந்து பல முறை தப்பிக்க முயற்சி செய்ததாகவும் எனினும் ராணுவ வீரர்கள் எளிதாக பிடித்துவிட்டதாகவும் லீ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட தனக்கு நிவாரணமாக 16 மில்லியன் பவுண்ட தர வேண்டும் என கோரி அவர் ஜப்பானிய அரசாங்கத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இந்த செயலுக்காக வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் அவரது குற்றச்சாட்டை ஜப்பான் மறுத்துள்ளது. மேலும் அவர் இரண்டாம் உலகப்போரின் போது பணத்திற்காக விபச்சாரத்தில் ஈடுபட்டவர் என்றும் தெரிவித்துள்ளது.