கண்டியில் நாணய மாற்று நிதி நிறுவனம் சுற்றிவளைப்பு; இருவர் கைது
கண்டி நகரில் அனுமதிப்பத்திரம் இன்றி முன்னெடுக்கப்பட்ட நாணய மாற்று நிதி நிறுவனம் ஒன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது . மத்திய வங்கியின் அதிகார...


கண்டி நகரில் அனுமதிப்பத்திரம் இன்றி முன்னெடுக்கப்பட்ட நாணய மாற்று நிதி நிறுவனம் ஒன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது .
மத்திய வங்கியின் அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது குறித்த நாணய மாற்று நிறுவனத்தில் சேவையாற்றிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவி்கின்றது.
கலஹா மற்றும் மாவனெல்ல பகுதிகளை சேர்ந்த இருவரே நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து சுமார் 2,21,000 ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயம் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கண்டி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்..