ஆப்கான் பாராளுமன்றத்தின் மீது தலிபானியர்கள் தாக்குதல்
ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தின் மீது தலிபானியர்கள் இன்று தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் சிக்கிய எம்.பி.க்கள் கதி என்...


ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தின் மீது தலிபானியர்கள் இன்று தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் சிக்கிய எம்.பி.க்கள் கதி என்ன என்பது தெரியவில்லை.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது தலிபான் தீவிரவாதிகளின் தற்கொலைப் படை திடீரென பாராளுமன்றம் மீது தாக்குதல் நடத்தியது.
பாராளுமன்றத்தில் அடுத்தடுத்து 4 குண்டுகள் வெடித்தன. இதனால் அச்சமடைந்த எம்.பி.க்கள் பாராளுமன்றத்தை விட்டு தப்பி ஓடினர். தற்போது தலிபான் தீவிரவாதிகளுக்கும் ஆப்கான் இராணுவத்துக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்ற அதேவேளை இத்தற்கொலைத் தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.