மத வழிபாடுகளில் ஈடுபடுவதனை சிலர் கிண்டல் செய்கின்றனர்: மஹிந்த கவலை
மத வழிபாடுகளில் ஈடுபடுவதனை சிலர் கிண்டல் செய்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்கால சந்ததியினரை மத வழிபாட...

http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_4.html

எதிர்கால சந்ததியினரை மத வழிபாடுகளில் ஈடுபடுத்தி தேசத்தை நேசிக்க செய்வதனை விட்டுää அவ்வாறு செய்யும் நபர்களை கேலி செய்வது சரியானதல்ல.
இவ்வாறு செய்வதானது மேல பார்த்துக் கொண்டு உமிழ்வதற்கு நிகரானதாகும்.
எந்த நேரத்திலும் இளம் தலைமுறையினரை மத வழிபாடுகளில் ஈடுபடுத்தும் முன்னுதாரணத்தை தலைவர்கள் வழங்க வேண்டும்.
நான் விஹாரைகளுக்க சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதனை சிலர் கிண்டல் செய்கின்றனர். எனினும், எதிர்கால சந்தத்தியினருக்கு முன்னுதாரணமாக திகழவே நான் விரும்புகின்றேன்.
இளைஞர்கள் மத வழிபாடுகளில் ஈடுபடாமல் விட்டால் எதிர்கால சந்ததியினர் சீரழியக் கூடுமென முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சிதுல்பவ்வவில் பொசோன் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.