காதலியின் கழுத்தை வெட்டிய காதலன் கைது! யாழில் சம்பவம்
வல்வெட்டித்துறை ஊறணி பகுதியில் யுவதி ஒருவரின் கழுத்தை வெட்டிய இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். காதல் தகராறு கார...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_6.html
![]() | |
வல்வெட்டித்துறை ஊறணி பகுதியில் யுவதி ஒருவரின் கழுத்தை வெட்டிய இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதல் தகராறு காரணமாக இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
20 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 25ஆம் திகதி யுவதியின் வீட்டுக்குச் சென்ற இளைஞன், யுவதியின் கழுத்தை வெட்டியதுடன், தன்னையும் வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளார்.
படுகாயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இளைஞன் சிகிச்சை பெற்று இன்று வீடு திரும்பியதை அடுத்து, அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
|



Sri Lanka Rupee Exchange Rate