நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதிக்க இணக்கம்
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. எதிர்வரும் 10ம் மற்றும் 11ம...


எதிர்வரும் 10ம் மற்றும் 11ம் திகதிகளில் நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
கட்சித் தலைவர்கள் நேற்று நடத்திய கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் சமால் ராஜபக்ச தலைமையில் அவரது காரியாலயத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டது.
கூடிய விரைவில் நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் தினேஸ் குணவர்தன ஆகியோர் கோரியுள்ளனர்.
பெரும்பாலும் எதிர்வரும் 10ம் மற்றும் 11ம் திகதிகளில் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது