தமிழ் இளைஞர்களை கடத்தும் சிறிலங்கா கடற்படையினர்!

 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவத்துடன் சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக குற்றப்புலனாய்வு...








 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவத்துடன் சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் 2008ம் ஆண்டு, ஐந்து தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவம் தொடர்பான வழங்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது சாட்சியமளித்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொறுப்பதிகாரி ரஞ்சித் முனசிங்க இந்த தகவலை வெளியிட்டார்.

குறித்த ஐந்து இளைஞர்களின் கடத்தல்களுடன் சுமித் ரணசிங்க மற்றும் சந்தன குமார ஆகிய கற்படை அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதால் அவர்களைக் கைது செய்யவில்லை என்று கூறிய ரஞ்சித் முனசிங்க,  அவர்களின் வெளிநாட்டு பயணங்களைத் தடைசெய்யும் உத்தரவொன்றை நீதிமன்றத்திடமிருந்து பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

இவர்கள் இருவர் தவிர சம்பத் முனசிங்க எனும் மேலும் ஒரு கடற்படை அதிகாரியும் இந்த கடத்தல்களில் சம்பந்தப்பட்டுள்ளதை தான் மேற்கொண்ட விசாரணைகளின்போது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொறுப்பதிகாரி ரஞ்சித் முனசிங்க கூறினார்.

மேலும் மூன்றாவது சந்தேகநபருக்கு கடந்த காலத்தில் கொட்டாஞ்சேனை பகுதியில் நிகழ்ந்த கடத்தல் சம்பவங்களுடனும் தொடர்பிருப்பதாக தமது விசாரணைகளில் தெரியவந்திருப்பதாகவும் ரஞ்சித் முனசிங்க நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வழக்கின் மேலதிக விசாரணை எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related

இலங்கை 6275380789404465454

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item