கிளிநொச்சியில் மற்றுமொரு மாணவி மீது பாலியல் வன்கொடுமை!
புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வின் பின் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தாயகம் எங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_50.html
![]() |
புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வின் பின் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தாயகம் எங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறை சம்பவங்களை கண்டித்து தாயகம் எங்கும் போராட்டங்களும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இருந்த போதும் தாயகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறைந்த பாடியில்லை.
இந்நிலையில் கிளிநொச்சியில் 15 வயது பாடசாலை மாணவி ஒருவர் நேற்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளார்.
முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகியம்மா ஆலயத்தில் நடைபெற்ற வருடாந்த பொங்கல் திருவிழாவில் கலந்துகொண்டு விட்டு வீடு திரும்பிய மாணவிக்கே இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
கிளிநொச்சி விசுவமடு பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மல்லாவியைச் சேர்ந்த பாடசாலை மாணவியே குறித்த வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய 35 வயது மதிக்கத்தக்க ஒருவரே இந்த குற்றச்செயலை புரிந்ததாக தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்யும் வகையில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவி கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அண்மைக்காலமாக தாயகப் பகுதியில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளமை பெரும் சாபக்கேடாக அமைந்துள்ளதாக சமூக ஆர்வர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
|



Sri Lanka Rupee Exchange Rate