அடித்து நொறுக்கப்பட்ட யாழ்.நீதிமன்றத்தை பார்வையிட்ட பிரதம நீதியரசர்

நீதிமன்ற வளாகத்தில் கடந்த புதன்கிழமை போராட்டக்காரர்களால் தாக்குதலுக்குள்ளான யாழ்.நீதிமன்ற கட்டடத் தொகுதியை பிரதம நீதியரசர் கனகசபாபதி ஸ்ரீ...

நீதிமன்ற வளாகத்தில் கடந்த புதன்கிழமை போராட்டக்காரர்களால் தாக்குதலுக்குள்ளான யாழ்.நீதிமன்ற கட்டடத் தொகுதியை பிரதம நீதியரசர் கனகசபாபதி ஸ்ரீபவன் இன்று பார்வையிட்டுள்ளார்.

நீதியரசருடன் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோனும் பார்வையிட சென்றுள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபர்கள் கடந்த புதன்கிழமை நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்படுகின்றனர் எனக்கருதிய சிலர் நீதிமன்றத்தை முற்றுகையிட்டு, பொலிஸாரின் பாதுகாப்பு வேலியை உடைத்து உள்நுழைந்து நீதிமன்ற கட்டடத்தின் மீது கற்கள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்த சட்டத்தரணியின் கார் உட்பட 3 வாகனங்களை அவர்கள் சேதமாக்கியுள்ளனர். இதனைக் கண்டித்து யாழ்.சட்டத்தரணிகள் இன்று அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலைமைகளைப் பார்வையிடும் பொருட்டு, பிரதம நீதியரசர் யாழ்ப்பாணம் வருகை தந்து நிலைமைகளை பார்வையிட்டதுடன், யாழ்.நீதிமன்றத்தில் நின்றிருந்த நீதிபதிகள், சட்டத்தரணிகள் ஆகியோருடன் கலந்துரையாடி விடயங்களை அறிந்து கொண்டார்.

Related

மஹிந்தவிடம் “சென்று” ல.ஊ ஆணைக்குழு விசாரிக்கும்: சபாநாயகர்

எதிர்வரும் 24ம் திகதி லஞ்ச,ஊழல் ஆணைக்குழுவுக்கு விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அழைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து பாராளுமன்றுக்கு உள்ளும் வெளியிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ள நிலையில்...

ஆப்பு ஆரம்பம் ; கோட்டாவுக்கு புதன் – மகிந்தவுக்கு வெள்ளி

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் புதனன்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் 24ஆம் திகதியும் ஆஜராகவுள்ளனர். கோட்டாபய ராபக்ஷவை புத...

முர்ஷிக்கு 20 வருட சிறை

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் மொர்ஷிக்கு அந்நாட்டு நீதிமன்றமொன்று 20 வருட சிறைத்தண்டனை வழங்கி இன்று தீர்ப்பளித்துள்ளது.அவர் பதவியிலிருந்த போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை கொலைசெய்தாகக் கூறிய...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item