மஹிந்தவிடம் “சென்று” ல.ஊ ஆணைக்குழு விசாரிக்கும்: சபாநாயகர்

எதிர்வரும் 24ம் திகதி லஞ்ச,ஊழல் ஆணைக்குழுவுக்கு விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அழைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து பாராளுமன்றுக்...

எதிர்வரும் 24ம் திகதி லஞ்ச,ஊழல் ஆணைக்குழுவுக்கு விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அழைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து பாராளுமன்றுக்கு உள்ளும் வெளியிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ச ல.ஊ ஆணைக்குழு அலுவலகத்துக்குச் செல்லத் தேவையில்லை, பதிலுக்கு ல.ஊ ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவரைச் சென்று சந்தித்து வாக்கு மூலத்தைப் பெற்றுக்கொள்ள இணங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார் சபாநாயகர்.

சுயாதீன ஆணைக்குழு இயங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும் முன்னாள் ஆட்சியாளர்களின் ஊழல்கள் விசாரிக்கப்படாமல் உள்ளதாகவும் மக்கள் விசனப்பட்டு வந்த நிலையில் மஹிந்த ராஜபக்சவுக்கு விசாரணை அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததும் அதனைத் தொடர்ந்து கடந்த 24 மணி நேரமாக பாராளுமன்ற நடவடிக்கைகளும் பாதிக்கப்படுமளவுக்கு மஹிந்த ஆதரவாளர்களின் நடவடிக்கை அமைந்து வருவதும் இன்றைய தினம் பாராளுமன்றில் 19ம் திருத்தச் சட்டத்தின் மீதான விசாரணை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

தலைப்பு செய்தி 8977431279236030583

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item