சவுதி அரேபியாவில் ஒபாம மிச்சேலின் முகத்தை மங்கலாக்கிய ஊடகங்கள் மீது குற்றச்சாட்டு!
சவுதி அரேபியா சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்செலின் முகத்தை மங்கலாக்கி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பியது சர்ச்சையை ஏற்படுத்தி...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_777.html
சவுதி அரேபியா சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்செலின் முகத்தை மங்கலாக்கி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சவுதி மன்னர் அப்துல்லாவின் இறுதி சடங்கில் பங்கேற்க சவுதி அரேபியாவுக்கு ஒபாமா, அவரது மனைவி மிச்செல் ஒபாமா ஆகிய இருவரும் சென்றுள்ளனர். இந்நிலையில் சவுதி தலைநகர் ரியாத்தில்(Riyadh) இறங்கிய ஒபாமாவின் மனைவி மிச்செல், சவுதி அரேபியாவில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தலையை மறைக்கும் துணியை அணியாமல், நீண்ட பேன்ட் மற்றும் பளீர் நிறத்திலான ஆடையுடன் மேல் அங்கி போன்றவையையும் அணிந்திருந்தார்.இதை பார்த்த பலர் கை குலுக்க மறுத்ததுடன், தலையை மட்டும் அசைத்து வரவேற்றுள்ளனர்.இச்சம்பவம் மிச்செல் மனதை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, மேலும் மிச்செலின் உருவம் தொலைக்காட்சியில் மங்கலாக்கி காட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இச்செய்தி சமூக வலைத்தளங்களிலும் பரவியது, ஆனால் இதனை அந்நாட்டு ஊடகங்கள் மறுத்துள்ளது.
இதுதொடர்பாக சவுதி அரேபிய தூதரக தகவல் தொடர்பு இயக்குனர் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, அவரது மனைவி மிச்செல் ஆகியோர் சவுதிக்கு வந்தது முதல் மன்னர் சல்மானை சந்தித்தது வரை அனைத்தும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில் மிச்செலின் உருவம் மங்கலாக்கப்படவில்லை, அவரை மன்னர் கைகுலுக்கி வரவேற்றது முதல் எந்த காட்சியும் மங்கலாக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate