அமெரிக்க அதிபர் ஒபாமவிற்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கொலை மிரட்டல்!
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தலையைத் துண்டித்து,அந்நாட்டை இஸ்லாமிய நாடாக்குவோம் என ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக ...


குர்தீஷ் வீரரின் தலையைக் கொய்வதற்கு முன்னதாக, ஈராக்கின் மோசூல் நகர வீதியில் நின்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பேசுவது போல் அந்த வீடியோவில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ காட்சிகளில் அமெரிக்கா மட்டுமின்றி பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்திற்கும் மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது. தொடர்ந்து தீவிரவாதத்திற்கு எதிராக போராடி வருகிறது அமெரிக்கா. தனது இந்திய மற்றும் சவுதி பயணத்தின் போதும் கூட அமெரிக்க அதிபர் ஒபாமா தீவிரவாதத்தை ஒழிப்பது குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.