கைது செய்யப் பட்டுள்ள போதை பொருள் வியாபாரி வெலெ சுதா கொழும்பு பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பண பரிமாற்றம் செய்துள்ளதாகவும் பாரா...

கைது செய்யப் பட்டுள்ள போதை பொருள் வியாபாரி வெலெ சுதா கொழும்பு பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பண பரிமாற்றம் செய்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்
துமிந்த சில்வாவின் வங்கி கணக்குகளை சோதனையிடுவதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆணை பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் பொலிஸ் தலைமையகத்தில் தற்பொழுது இடம் பெறும் செய்தியாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகார அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அதேவேளை வெலே சுதா மற்றும் அவரது மனைவியின் வங்கி கணக்களையும் சோதனையிட ஆணை பெற்றுள்ளதாக அவர் மெலும் தெரிவித்தார். மேலும் துமிந்த நாட்டை விட்டு வெளியேறுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்