மகிந்தவே பிரதமர் வேட்பாளர்: குமார வெல்கம
எதிர்வரும் பொது தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவார் என முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தெரிவித்த...


கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்துவதற்கான தருணம் கிட்டியுள்ளது.
எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து தற்போதைய அரசாங்கத்தினை வீட்டுக்கு அனுப்பி மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தினை கட்டியெழுப்புவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதுமாத்திரமல்லாது எதிர்வரும் பொது தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மேலும் தெரிவித்துள்ளார்.