ராஜபக்ஷக்களின் 1935 மில்லியன் டொலர் திடீரென மாயம்!

சட்டவிரோதமான முறையில் டுபாயில் பதுக்கப்பட்ட பணம் திடீரென வேற வங்கியொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ...

சட்டவிரோதமான முறையில் டுபாயில் பதுக்கப்பட்ட பணம் திடீரென வேற வங்கியொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட பணமே இவ்வாறு வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிறிலங்காவைச் சேர்ந்த நான்கு பேரின் பணம் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து அரசாங்கம் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

இந்த விடயம் குறித்து ஜனாதிபதியுடன் ஜே.வி.பியினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அரசாங்கத்தைச் சேர்ந்த தரப்பினர் விசாரணைகள் குறித்து, நான்கு பேருக்கும் இரகசியமாக தகவல்களை வழங்கிய காரணத்தினால் அவர்கள் கணக்குகளை பஹாமஸிற்கு மாற்றியுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.

விசாரணைகளை நடத்த நியமிக்கப்பட்ட அதிகாரிகளே இவ்வாறு இரகசியமாக தகவல்களை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த விபரங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்து கொண்டு நாட்டுக்கு இது பற்றிய தகவல்களை அம்பலப்படுத்துமாறு ஜே.வி.பி ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர்.



Related

இலங்கை 6049805761332451479

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item