ஜனாதிபதி மைத்திரியுடன் முரண்பட்டுக் கொண்டு கூட்டத்திலிருந்து வெளியேறினார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க!

உத்தேச தேர்தல் முறைமை மாற்றம் மற்றும் தேர்தலை நடத்தும் காலப்பகுதி தொடர்பாக ஆராயும் முக்கிய கூட்டம் இன்று நடந்து வரும் நிலையில், ஜனாதிபதி ...

உத்தேச தேர்தல் முறைமை மாற்றம் மற்றும் தேர்தலை நடத்தும் காலப்பகுதி தொடர்பாக ஆராயும் முக்கிய கூட்டம் இன்று நடந்து வரும் நிலையில், ஜனாதிபதி மைத்திரியுடன் முரண்பட்டுக் கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறியுள்ளார். ஜனாதிபதி சுதந்திரக்கட்சியின் தலைவராக மட்டுமே செயற்படுகிறார் என குற்றம் சுமத்திவிட்டே ரணில் கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் முறைமை மாற்றம் உள்ளிட்ட விடயங்களை ஆராய நேற்று கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவுகள் எட்டப்படாத நிலையில், இன்று இது தொடர்பாக ஆராய்வதென தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி செயலகத்தில் மைத்திரி மற்றும் ரணிலின் தலைமையில் நடந்த கூட்டத்திலேயே இந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

விகிதாசார தேர்தல் முறையை மாற்றிவிட்டே பொதுத்தேர்தலிற்கு செல்ல வேண்டுமென சுதந்திரக்கட்சி மற்றும் சிங்கள்கட்சிகள் சில விடாப்பிடியாக நிற்கின்றன. ஐ.தே.க, ஜே.வி.பி மற்றும் சிறுபான்மை கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன், தொகுதிவாரி தேர்தல் முறைமையினால் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் குறைவடையும் என தெரிவித்து வந்த நிலையில் இன்றைய கூட்டம் நடந்துள்ளது.
இன்று, சுதந்திரக்கட்சியின் நிலைப்பாட்டையே பெருமளவில் மைத்திரி பிரதிபலித்ததையடுத்தே, ரணில்- மைத்திரி முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இது பற்றிய மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Related

புதிய வருடத்தில் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்: இரா.சம்பந்தன்

புதிய வருடத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இனப்பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.இலங்கையில் தற்போது ஆட...

ஜனநாயகத்தை மீண்டும் ஏற்படுத்த தான் நடவடிக்கை எடுப்பேன் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் மைத்திரி வாக்குறுதி

சிறிலங்காவில் ஜனநாயகத்தை மீண்டும் ஏற்படுத்த தான் நடவடிக்கை எடுப்பேன் என்று கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.கலதாரி விடுதியில...

හොරපෙරකදෝරු නාමල් මෝටර් රථය රටින් පන්නයි !!!

රුපියල් මිලියන 42.2 , ලක්ෂ 420 වටිනා ඇස්ටන් මාර්ටින් මෝටර් රථය පසුගියදා රටින් පිටකිරීමට එහි හිමිකරු හොරපෙරකදෝරු නාමල් රාජපක්ෂ විසින් කටයුතු යොදා ඇත , මෙම ඇස්ටන් මාර්ටින් මෝටර් රථය පළමුව සිංගප්පුරුවට ග...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item