அமெரிக்காவின் பென்டகனுக்கு இணையாக கோத்தபாயவின் கோட்டை!
மஹிந்த அரசாங்கத்தின் போது முன்னெடுக்கப்பட்ட முறையற்ற அபிவிருத்தி திட்டங்களை மைத்திரி அரசாங்கம் இடைநிறுத்தி வருகிறது. இந்நிலையில் கோத...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_745.html

மஹிந்த அரசாங்கத்தின் போது முன்னெடுக்கப்பட்ட முறையற்ற அபிவிருத்தி திட்டங்களை மைத்திரி அரசாங்கம் இடைநிறுத்தி வருகிறது.
இந்நிலையில் கோத்தபாயவினால் முன்னெடுக்கப்பட்டு வந்த பாதுகாப்புத் தலைமையகம் அமைக்கும் பணிகள் இடை நிறுத்தப்படுவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹிந்த அரசாங்கத்தில் பாதுகாப்பு தலைமையகம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டிருந்தது. இது அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகனை விடவும் செலவு கூடிய ஒன்றாகவே அமைக்கப்படவிருந்தது.
அத்துருகிரிய பிரதேசத்தில் 5000 கோடி ரூபா செலவில் இந்த பாதுகாப்புத் தலைமையகம் அமைக்கப்பட்டு வந்த நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதன் நிர்மாண பணிகளுக்கு செலவழிக்கப்படும் பணத்தைக் கொண்டு அப்பாவி பொதுமக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க முடியும்.
பாதுகாப்புத் தலைமையகத்தை அமைக்க அமைச்சரவையின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டதா என கோத்தபாய ராஜபக்சவிடம் கேள்வி எழுப்புகின்றோம்.
தலைமையகத்தை அமைப்பதற்கு 5000 கோடி ரூபா செலவாகும் என்றால் அதற்கான விலைக் மனுக் கோரல்கள் கோரப்பட்டதா?
போலியான நோக்கங்களுக்காக அபிவிருத்தித் திட்டங்களை அனுமதிக்க முடியாது.
இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களை ரத்து செய்து அதன் மூலம் மக்களுக்கு நன்மைகளை வழங்கவே திட்டமிட்டுள்ளோம் என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate