பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றங்கள் ரத்து: ஜனாதிபதி உத்தரவு
அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் இடமாற்றங்களையும், உடன் அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளா...


ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளடங்கலான மூவரடங்கிய குழுவே, பொலிஸாரின் இடமாற்றங்கள் குறித்து தீர்மானிக்குமென ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உட்பட பொலிஸ் சேவையிலிருந்த பலருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.