இலங்கையில் இன்று முதல் தேசிய அரசாங்கம்
இலங்கையில் தேசிய அரசாங்கம் ஒன்றினை உருவாக்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபா...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_347.html

இலங்கையில் தேசிய அரசாங்கம் ஒன்றினை உருவாக்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவிற்கும் இடையில் இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் தேசிய அரசாங்கம் ஒன்றினை உருவாக்குவது தொடர்பிலான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் அந்த கட்சிக்கு 15 அமைச்சுப் பதவிகளும், 10 பிரதி அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.


Sri Lanka Rupee Exchange Rate