எனது மகன் என் மனைவிக்கும் எனக்கும் இடையில் தான் இன்னும் படுக்கிறான் !
எனது மகன் எந்தப் பெண்ணையும் கடத்திவரவில்லை. சொல்லப்போனால் அவன் இன்னும் எனக்கும் என் மனைவிக்கும் இடையே தான் படுக்கிறான். அந்த அளவு அப்பா...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_345.html

எனது மகன் எந்தப் பெண்ணையும் கடத்திவரவில்லை. சொல்லப்போனால் அவன் இன்னும் எனக்கும் என் மனைவிக்கும் இடையே தான் படுக்கிறான். அந்த அளவு அப்பாவியானவன் என்று , அமைச்சர் ராஜித சேனாரட்ட தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் , பாடசாலை சென்ற தனது 17 வயது மகள் வீடு திரும்பவில்லை என்றும் , அவரை ராஜித சேனாரட்னவின் மகன் இழுத்துக்கொண்டு ஓடிவிட்டதாகவும் பிரபல வர்த்தகர் ஒருவர் தெரிவித்திருந்தார். கிருளப்பனையில் உள்ள இந்த வர்த்தகர் பல மீடியாக்களை வரவளைத்து ஒரு பேட்டியைக் கொடுத்திருந்தார்.
இதற்கு பதில்கொடுக்கும் விதத்திலேயே அமைச்சர் ராஜித சேனாரட்ன இவ்வாறு தெரிவித்துள்ளார். 17 வயதாகும் குறித்த அப்பெண் , தனது சுய விருப்பத்தின் பேரில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் சில மீடியாக்கள் இதனை விட்டபாடாக இல்லை. கிளறிக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். குறித்த இந்த வியாபரி , தன்னிடம் உதவிகேட்டு வந்ததாகவும் அவர் தனது முன் நாள் நண்பர் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். வியாபாரத்தில் நஷ்டமடைந்த அவர்கள் அமைச்சரான என்னை நாடி வந்து பல உதவிகளைக் கேட்டார்கள். சிலவற்றை நான் செய்து கொடுத்தேன். ஆனால் சட்ட திட்டங்களை மீறி என்னால் மேற்கொண்டு எதனையும் செய்ய முடியவில்லை.
இதனால் மன விரக்த்தி அடைந்த தம்பதிகளே(வியாபாரி) இவ்வாறு என் மீது சேறு பூசுகிறார்கள் என்று அமைச்சர் ராஜித சேனாரட்ன மேலும் தெரிவித்துள்ளார் என்று அதிர்வு இணையம் அறிகிறது.


Sri Lanka Rupee Exchange Rate