சிறிலங்கா சுதந்திர கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது

 சிறிலங்கா பாராளுமன்றத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சி வைத்திருந்த பெரும்பான்மை பாலம் இன்று இல்லாமல் போயுள்ளது. இதன்மூலம் சிறிலங்கா சுதந்தி...


 சிறிலங்கா பாராளுமன்றத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சி வைத்திருந்த பெரும்பான்மை பாலம் இன்று இல்லாமல் போயுள்ளது. இதன்மூலம் சிறிலங்கா சுதந்திர கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிறிலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரி - ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டனர்.

 இதன்மூலம் அமைச்சுப் பதவிகளையும் பெற்றுக்கொண்டனர். இது தொடர்பான நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இதன்போது சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 16 பேர் அமைச்சர்களாகவும் 10 பேர் பிரதியமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

 16 அமைச்சர்களில் ஐவர் இராஜாங்க அமைச்சர்களாகவும் 11 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

சிறிலங்காவின் பாராளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட மாற்றத்தின் மூலம் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மஹிந்தவை நிறுத்த வேண்டும் என சிறிலங்கா சுதந்திர கட்சியின் சில உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கான அழுத்தங்களை மஹிந்தவே வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவி ஏற்ற அமைச்சர்கள் விபரம் வருமாறு,

ஏ.எச்.எம்.பௌசி - இடர் முகாமைத்துவ அமைச்சர்

 எஸ்.பி.நாவின்ன - தொழில் அமைச்சர் 

பியசேன கமகே - திறன் விருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர் 

சரத் அமுணுகம - உயர்கல்வி மற்றும் ஆராச்சி அமைச்சர் 

எஸ்.பி.திஸாநாயக்க - கிராமிய விவகார அமைச்சர்

ஜனக பண்டார தென்னக்கோன் - மா
காண சபைகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் 

பீலிக்ஸ் பெரேரா - விஷேட செயற்திட்ட அமைச்சர் 

மஹிந்த யாப்பா அபேவர்த்தன - பாராளுமன்ற விவகார அமைச்சர் 

ரெஜினல் குரே - விமான சேவைகள் அமைச்சர்

விஜித் விஜயமுனி சொய்சா - நீர்பாசன அமைச்சர் 

மஹிந்த அமரவீர - கடற்தொழில் அமைச்சர் 

இராஜாங்க அமைச்சர்களாக பதவி ஏற்ற அமைச்சர்கள் விபரம் வருமாறு, 

பவித்ராதேவி வன்னியாராச்சி - சுற்றுச்சூழல் இராஜாங்க அமைச்சர் 

 ஜீவன் குமாரதூங்க - தொழில் இராஜாங்க அமைச்சர் 

மஹிந்த சமரசிங்க - நிதி இராஜாங்க அமைச்சர் 

 சீ.பி.ரத்நாயக்க - அரச நிர்வாக இராஜாங்க அமைச்சர் 

 டிலான் பெரேரா - வீடமைப்பு மற்றும் சமுர்த்தி இராஜாங்க அமைச்சர் 

பிரதி அமைச்சர்களாக பதவி ஏற்ற அமைச்சர்கள் விபரம் வருமாறு, 

தயாசிறித திசேரா - கடற்தொழில் பிரதி அமைச்சர்

 திஸ்ஸ கரலியத்த - புத்த சாசன மற்றும் ஜனநாயக நிர்வாகம் தொடர்பான பிரதி அமைச்சர் 

 ரஞ்சித் சியாம்பலாபிடிய - உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் 

 லக்ஷ்மன் செனவிரத்ன - அனர்த்த முகாமைத்துவ பிரதி அமைச்சர் 

 லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன - விமான சேவைகள் பிரதி அமைச்சர் 

 லலித் திஸாநாயக்க - நீர்பாசன பிரதி அமைச்சர் 

ஜகத் புஸ்ப குமார - பெருந்தோட்டக் கைத்தொழில் பிரதி அமைச்சர் 

 லசந்த அழகியவத்த - கிராமிய விவகார பிரதி அமைச்சர் 

 சுதர்ஷனி பிரணாந்துப் பிள்ளை - உயர்கல்வி மற்றும் ஆராச்சி பிரதி அமைச்சர்


சாந்த பண்டார - ஊடகதுறை பிரதி அமைச்சர் 

Related

இலங்கை 8946427912393089585

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item