யேமனில் இடம்பெற்று வரும் மோதல்களில் இலங்கையர்கள் சிலர் நிர்க்கதியாகியுள்ளதாக தகவல்

யேமனில் இடம்பெற்று வருகின்ற மோதல்களில் இலங்கையர்கள் சிலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யேமன் தலைநகர் சானாவை அண்மித்த பகுதியில் கு...

யேமனில் இடம்பெற்று வரும் மோதல்களில் இலங்கையர்கள் சிலர் நிர்க்கதியாகியுள்ளதாக தகவல்
யேமனில் இடம்பெற்று வருகின்ற மோதல்களில் இலங்கையர்கள் சிலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யேமன் தலைநகர் சானாவை அண்மித்த பகுதியில் குறித்த இலங்கையர்கள் நிர்க்கதியாகி உள்ளதாக அவர்களது உறவினர்கள் நியூஸ்​பெஸ்ட்க்கு தெரிவித்தனர்.

இவர்கள் கம்பஹா, கந்தானை, தொம்பே, பிலியந்தலை, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யேமனில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர தேவையான ஒழுங்குகளை மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது

இதேவேளை. யேமனில் மோதல்களில் சிக்கியுள்ள மூவாயிரத்து 500 இற்கும் மேற்பட்ட இந்தியப் பிரஜைகளை நாட்டுக்கு அழைத்துவருவதற்காக இந்திய அரசாங்கம் கப்பல்களை அனுப்பிவைக்க உத்தேசித்துள்ளது.

மோதல்கள் வலுவடைந்துள்ள நிலையில் யேமன் சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளமையே இதற்கு காரணமாகும்.

Related

இலங்கை 2442745556540595245

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item