சிங்களவர்கள் மத்தியில் மீண்டும் பிரபல்யம் அடைய இனவாதம் எனும் ஆயுதத்தை மஹிந்த பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் தனக்கு எதிராக வாக்களித்த தமிழ் மக்களை பிரிவினைவாதிகள் என்ற மாயை ஏற்படுத்த மஹிந்த முயற்சித்து வருகிறார். சுதந்திர ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_814.html

சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷை நிறுத்த வேண்டும் எனக் கோரிய, அண்மையில் இரத்தினபுரியில் கூட்டமொன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நேரடியாக பங்கேற்காத மஹிந்த, தனது தகவல்களை அடங்கிய செய்திக் குறிப்பை அனுப்பி வைத்திருந்தார்.
அதில் தன்னைத் தோற்கடித்தது பிரிவினைவாதிகளும், வெளிநாட்டு சக்திகளும் தான் என குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்தவின் செய்திக் குறிப்பை அவரது ஊடகப் பேச்சாளராக இருந்த மொகான் சமரநாயக்கவினால் வாசிக்கப்பட்டது.
அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது,
ஜனாதிபதி தேர்தலில் வெளிநாட்டு சக்திகளும் பிரிவினைவாதிகளும் தம்மைத் தோற்கடித்த போதிலும் அரசியல் ரீதியாக தோற்கடிக்க முடியாது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெளிநாட்டினரின் சதி முயற்சி காரணமாக தோல்வியடைந்தோம். ஆனால் உங்கள் மனதிலிருந்து இன்று வரை தோற்கவில்லை.
அரசியல் ரீதியாக எம்மை யாராலும் தோற்கடிக்க முடியாது என்பதனை எதிரிகளுக்கும் வெளிநாட்டினருக்கு அறிவிக்க விரும்புகின்றேன்.
எதனை இல்லாதொழித்தாலும் எமது ஆத்ம கெளரவத்தை இல்லாதொழிக்க முடியாது. இதனை நாம் எதிரிகளுக்கு புரிய வைக்க வேண்டும்.
பிரிவினைவாதிகள் எமது கொள்கைகளை இல்லாதொழிக்க முயற்சிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate