மழையே பெய்திருந்தாலும், இலங்கையை காப்பாற்றியிருக்க முடியாது.. ஏன் தெரியுமா?
சிட்னி: உலக கோப்பை காலிறுதி போட்டிகளில், ரிசர்வ்டே என்ற புதிய விதிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், மழையே பெய்திருந்தாலும், தென் ஆப்பிரி...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_870.html

சிட்னி: உலக கோப்பை காலிறுதி போட்டிகளில், ரிசர்வ்டே என்ற புதிய விதிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், மழையே பெய்திருந்தாலும், தென் ஆப்பிரிக்காவுக்கு அதனால் எந்த பாதிப்பும் ஏற்பட்டிருக்காது. உலக கோப்பை கிரிக்கெட் தொடர்களில் நாக்-அவுட் சுற்று என்று வந்து விட்டால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக துரதிருஷ்டம் வீடு கட்டி அடிக்க தொடங்கிவிடும். அதில் முக்கியமானது மழை பெய்வது. இப்படித்தான், வெற்றிபெற வேண்டிய போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா தோல்வியை தழுவியுள்ளது.
இந்நிலையில், இன்று நடந்த காலிறுதி நாக்அவுட் போட்டியில் இலங்கையை ரன் அடிக்கவிடாமல் தென் ஆப்பிரிக்க பவுலர்கள் தடுத்து திறமையான பந்து வீச்சை வெளிப்படுத்தினர். இலங்கை அணி 36.2 ஓவர்களில், வெறும் 127 ரன்களிலேயே, 9வது விக்கெட்டை பறிகொடுத்தது. சங்ககாரா 9வது விக்கெட்டாக வீழ்ந்தார். அவர் அவுட் ஆன நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. எனவே தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விதி மீண்டும் விளையாட ஆரம்பித்துவிட்டதாகவே ரசிகர்கள் நினைக்க தொடங்கினர். மழையால் டக்ஒர்த் லீவிஸ் விதிமுறை கொண்டுவரப்பட்டு தென் ஆப்பிரிக்காவுக்கு பாதகமாக அது செல்லக் கூடும் என்ற அச்சம் அந்த நாட்டு ரசிகர்களுக்கு எழுந்தது. ஆனால் அங்குதான் கதையில் டிவிஸ்ட் இருந்தது. அதாவது, இந்த மாதிரி பிரச்சினைகளை சமாளிக்கத்தான், நாக்அவுட் போட்டிகளில் ரிசர்வ்டே என்ற விதி்முறையை ஐசிசி அப்ளை செய்துள்ளது. அதன்படி, மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலும், டக்வொர்த் உள்ளே வரமுடியாது. மற்றொரு நாளில், விட்ட இடத்தில் இருந்தே ஆட்டம் தொடங்கியிருக்கும். அப்படிப் பார்த்தாலும், தென் ஆப்பிரிக்காவுக்கு அது எளிதான இலக்குதான். இந்த ரன்னையும் அடிக்க முடியாமல் தோற்றாலும், இயற்கை மீதோ, அதிருஷ்டத்தின் மீதோ பழி போட்டிருக்க முடியாது. ஒருவேளை இரு நாட்களிலும் போட்டியை நடத்த முடியாமல் போயிருந்தாலும், லீக் போட்டியில் அதிக புள்ளிகள் பெற்ற அணி எதுவென்று பார்த்து அரையிறுதிக்கு அனுப்பி வைத்திருக்கும் ஐசிசி. அப்படியே பார்த்தாலும், தென் ஆப்பிரிக்காவுக்குதான் வாய்ப்பு இருந்தது. தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!


Sri Lanka Rupee Exchange Rate