ரயிலை நிறுத்தி நடக்கவிருந்த பெரும் விபத்தை தடுத்த சிறுவன் !! பாராட்டுக்கள் குவிகின்றன ..

தவாங்கீர்: தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசலால் ஏற்படவிருந்த பெரும் விபத்தை தவிர்த்த 9 வயதான புத்திசாலி சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்...

தவாங்கீர்: தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசலால் ஏற்படவிருந்த பெரும் விபத்தை தவிர்த்த 9 வயதான புத்திசாலி சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. தவாங்கீர் மாவட்டத்தை சேர்ந்த அவங்கிர் கிராமத்தில் வசித்து வரும் மஞ்சுநாத் என்பவரின் மகன் சித்தேஷ் அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காலை 6.30  மணிக்கு ரயில்வே தண்டவாளத்தை அந்த சிறுவன் கடக்க முயன்ற போது, தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தான். 


பின்னர் தனது தந்தையிடம் அதனை தெரிவித்த போது, அவர் விளையாட்டாக கூறுகிறான் என்று அதை பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார். இதுகுறித்து சிறுவன் சித்தேஷ் கூறியதாவது, 'தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசலை கண்டதும் நான் பயந்து விட்டேன். எனது தந்தையிடம் இதுகுறித்து கூறுயதும், நான் விளையாட்டாக சொல்வதாக எனது தந்தை நினைத்ததால், நான் அவரை சம்பவ இடத்திற்கு இழுத்து சென்றேன்' என்றான். அந்த நேரத்தில் சில ரயில்கள் வரும் வேளை நெருங்கியது. அப்போது அந்த வழியாக வரும் ரயில்களை நிறுத்த என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தோம் என்று மஞ்சுநாத் கூறினார்.


இதனையடுத்து, ரயில் வரும் நேரம் நெருங்கியதையடுத்து, திடீரென தனது மகன் சித்தேஷ் தனது சிகப்பு பனியனை எடுத்து ஒரு குச்சியில் சுத்திக்கொண்டு, தண்டவாளத்தில் சுமார் 7.30 மணியளவில் ரயில் வரும் பக்கம் ஓடினான். அப்போது, ஹீப்ளி-சித்ரதுர்கா பாசஞ்சர் ரயில் வந்து கொண்டிருந்தது. சிறுவன் சிகப்பு துணியை காட்டிக் கொண்டி ஓடி வருவதை கண்ட ரயிலின் ஓட்டுநர் ரயிலை நிறுத்திதாக சிறுவனின் தாயார் தெரிவித்தார். ரயிலில் உள்ள பயணிகள் அந்த சிறுவனை பாராட்டினர். 

Related

’அமெரிக்காவை விட்டு வெளியேறி கனடாவில் குடியேறுவோம்’: ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

அமெரிக்காவில் உள்ள ஓரினச்சேர்க்கையாளர்கள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்துக்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதை கண்டித்து நாட்டை விட்டு வெளியேறி கனடாவில் குடியேற உள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவ...

பிரான்சில் நடந்த தீவிரவாத தாக்குதல்: பொலிசாருக்கு கிடைத்த அதிர்ச்சியான புதிய தகவல்

பிரான்ஸ் நாட்டில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நபர் ஒருவரின் தலையை வெட்டி வேலியில் தொங்க விட்ட கொலையாளி குறித்து தற்போது கிடைத்துள்ள புதிய தகவல் பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரான்சின் லியோன்...

என் கணவர் தீவிரவாதி அல்ல.. பிரெஞ்சு தாக்குதலில் கைதான ஊழியரின் மனைவி

பிரான்சில் நேற்று நடந்த அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டுக் கைதாகியுள்ள ஊழியரின் மனைவி, தனது கணவர் இயல்பான முஸ்லீம் என்றும், அவர் எந்தத் தவறான செயலிலும் ஈடுபட்டிருக்க மாட்டார் என்றும், அவர் தீவிரவாதி அல...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item