வவுனியாவில்10 வயது மதிக்கத்தக்க சிறுவன் வெட்டிக் கொலை
வவுனியா – நெளுக்குளம், சாம்பல் தோட்டம் பகுதியில் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளான் சம்பவம் தொடர்பில் கிடைத்துள...


சம்பவம் தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.
இந்தக் கொலை சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்டுள்ள சிறுவனின் வீட்டின் பின் பகுதியிலிருந்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.