மேல் மாகாணசபையின் ஆளும் கட்சி இரண்டாக பிளவு?
மேல் மாகாணசபையின் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் இரண்டாக பிளவடைந்து இருவேறு இடங்களில் செய்தியாளர் சந்திப்புக்களை இன்று நடத்தியுள்ளனர். இன...


இன்று முற்பகல் பத்தரமுல்ல றோயல் பிலாசாவில் கூடிய ஹிருனிகா பிரேமசந்திர, மல்சா குமாரதுங்க, ரஞ்சித்சோமவன்ச, காமினி திலகசிறி, மஞ்சுள புத்ததாச, இசுர தேசப்பிரிய, உபாலி குணரட்ன ஆகியோர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் மேல் மாகாணசபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோரின் நடவடிக்கைகளையும், அவர்களுக்கு ஆதரவாக செயற்படுவோரையும் கடுமையான விமர்சனம் செய்தனர்.
இதேவேளை சற்று முன்னர் முதலமைச்சர் காரியாலயத்தில் நடைபெற்ற மற்றுமொரு செய்தியாளர் சந்திப்பில் ஆளும் கட்சியின் மற்றுமொரு தரப்பினர் கூடியிருந்தனர்.
முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையிலான இந்தத் தரப்பினர் தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கடுமையான விமர்சனம் செய்திருந்தனர்.
உதய கம்மன்பில, உபாலி கொடிகார, சுனில் ஜயமினி, ரொஜர் செனவிரட்ன, பியால் நிசாந்த, ஜகத் அங்ககே, சமன்மலி கலங்சூரிய உள்ளிட்டவர்கள் இவ்வாறு அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கடுமையான விமர்சனம் செய்தனர்.
மேல் மாகாணசபையின் ஆட்சி அதிகாரமும் தம்மிடம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.