”நீங்கள் வரவில்லை என்றால் மிகவும் நல்லது”: மஹிந்தவிடம் கூறிய மைத்திரி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, “நீங்கள் வரவில்லை என்றால் மிகவ...


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, “நீங்கள் வரவில்லை என்றால் மிகவும் நல்லது” என தெரிவித்துவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார் என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடக பேச்சாளர் ரோஹான் வெலிவிட்டவிடம் வினவிய போது, இது தொடர்பில் தனக்கு தெரியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் நேற்று இரவு 11 மணிவரையில் மஹிந்த ராஜபக்சவுடனே இருந்தேன். எனினும் அவ்வாறான ஒரு தொலைபேசி அழைப்புகள் வரவில்லை என அவர் கூறியுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவுக்கு கூட்டணியில் வேட்புரிமை வழப்படாதென உடனயாக நாட்டிற்கு தெரியப்படுத்தும் வகையில் அறிவிக்குமாறும், அநுர பிரியதர்ஷன யாப்பாவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி விட்டு அக்கட்சியில் அல்லது வேறு கட்சியில் தேர்தலில் போட்டியிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தனது ஆதரவாளர்கள் ஊடாக அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.