சரத் பொன்சேகாவின் மருமகனும் தேர்தலில் போட்டி
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக ஜனநாயகக் கட்சியின் தலைவரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலக்கரட்ன தெரிவித்...


எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக ஜனநாயகக் கட்சியின் தலைவரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலக்கரட்ன தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் சார்பில் தான் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தனுன திலக்கரட்ன, சரத் பொன்சேகாவின் மூத்த மகனான அப்சராவை திருமணம் செய்திருந்தார்.
அப்சரா சில மாதங்களுக்கு முன்னர் வேறு ஒருவரை மறுமணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.