ஐ.ம.சு. முன்னணியின் இறுதி வேட்பாளர் பட்டியலை ஆராயும் ஜனாதிபதி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் குறித்து இந்த கட்சிகளின் இறுதி வேட்புமனு குழு ஜனாத...


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் குறித்து இந்த கட்சிகளின் இறுதி வேட்புமனு குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாட உள்ளது.
இதனடிப்படையில் இன்று இரவு இந்த கலந்துரையாடல் நடைபெறும் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதி வேட்புமனு குழுவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் 6 பேர் அங்கம் வகிக்கி்ன்றனர்.
அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன. எஸ்.பி. திஸாநாயக்க, மகிந்த அமரவீர, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் அநுரபிரியதர்ஷன யாப்பா ஆகியோர் இறுதி வேட்புமனு குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
இன்று இரவு நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில் வேட்பாளர் பட்டியல் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
இதனிடையே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் இன்று மாலை கூடி பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தி வருகின்றனர்.
சகல மாவட்டங்களிலும் வழங்கப்பட உள்ள வேட்பாளர் பட்டியல் குறித்து இதன் போது மீளாய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே ஊழல், மோசடிகளில் சம்பந்தப்பட்ட எவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பை வழங்குவதில்லை என்ற இணக்கப்பாட்டுக்கு சகலரும் வந்துள்ளதாக தெரியவருகிறது.