கோத்தபாயவின் அரசியலுக்கு வரும் முயற்சியால் பயத்தில் நடுங்கும் விமல் வீரவன்ஸ
கோத்தபாய ராஜபக்ச கொழும்பு மாவட்டத்தின் ஊடாக அரசியலுக்கு வருவது தனக்கு பெரும் தடையாக இருக்கும் என கருதும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர்...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_286.html
கோத்தபாய ராஜபக்சவின் அரசியல் பிரவேச முயற்சியை ஆரம்ப இடத்திலேயே தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளில் விமல் வீரவன்ஸ ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், கோத்தபாய ராஜபக்ச, இன்று இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவிற்கு செல்லும் நேரத்தில் பொதுபல சேனா அமைப்பின் நடத்திய ஆர்ப்பாட்டத்தை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடாக விமல் வீரவன்ஸ குழப்ப முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது.
விமல் வீரவன்ஸவின் தூண்டுதல் காரணமாக நேற்றிரவு பொதுபல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரந்தெனியே நந்த தேரரை முன்னாள் ஜனாதிபதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
“நீங்கள் செய்யும் இந்த வேலை என்ன? உங்களது பொதுபல சேனா அமைப்புதான் என் நிலைமைக்கு காரணம். கோத்தபாயவுக்கு அரசியல் பற்றி மூளையில் எதுவுமில்லை.
தயது செய்து கோத்தபாயவை அரசியலுக்கு கொண்டு வரும் முயற்சியை நிறுத்துங்கள். இதனால் எனது மகனுக்கே பாதிப்பு ஏற்படும். இவை நோர்வேயின் சதித்திட்டங்கள்.
டிலந்த வித்தானகே தான் நோர்வேயுடன் இணைந்து இந்த விளையாட்டை ஆடுகிறான். நீங்கள் எனது அயல் கிராமத்தை சேர்ந்தவர். அதனால், நீங்கள எனக்கு ஆதரவானவர் என்பதை நான் அறிவேன். தயது செய்து இந்த வேலையை நிறுத்துங்கள்.
நான் விமலை உங்களிடம் அனுப்புகிறேன். அவர் கூறுவதை போல் செய்யுங்கள். டிலந்தவையும் ஞானசார தேரரையும் விரட்டி விட்டு பொதுபல சேனாவை நீங்கள் கைப்பற்றுங்கள். நான் உதவி செய்கிறேன்’’ என மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி தன்னிடம் கூறியதை விதாரந்தெனியே நந்த தேரர், ஞானசார தேரர் மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரிடம் உடனடியாக தெரிவித்துள்ளார்.