இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் கோத்தபாய- ஞாபகம் இல்லை கால அவகாசம் தேவை- சிறந்த முறையில் பணியாற்றிய அரச அதிகாரி நான்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். சற்று முன்னர் கோத்தபாய இலஞ்ச ஊ...

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

சற்று முன்னர் கோத்தபாய இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

அவன்ட்கார்ட், லக்ன லங்கா நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கோத்தபாயவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

பாரியளவில் நிதி மோசடிகளில் கோத்தபாய ஈடுபட்டதாக, தற்போதைய ஆளும் கட்சி குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை எந்தவிதமான மோசடிகளிலும் தாம் ஈடுபடவில்லை என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கால அவகாசம் வேண்டும் எனக்கோரிய கோத்தபாய: அவகாசம் கொடுத்த இலஞ்ச ஆணைக்குழு

தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆராய்ந்து விளக்கமளிப்பதற்கு கால அவகாசம் வேண்டும் என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சு செயலர் கோத்தாபய ராஜபக்‌ஷ கோரியதற்கிணங்க அவருக்கு 90 நாள்களின் பின்னர் அவருக்கு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு கால அவகாசம் வழங்கியது.


முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை முன்னிலையாகினார். ஆணைக்குழு அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டது. இதன்போது ஞாபகத்தில் இல்லாத தகவல்களை தாங்கள் கேட்பதால் அவற்றை ஆராய்ந்து விளக்கமளிப்பதற்கு தனக்கு 90 நாள்கள் கால அவகாசம் வழங்கவேண்டும் என்று ஆணைக்குழு அதிகாரிகளிடம் கோத்தாபய கேட்டுக்கொண்டார்.

அதற்கு இணங்கிய ஆணைக்குழுவினர் குறித்த கால அவகாசத்தை வழங்கினர் என்று தெரிவிக்கப்பட்டது. அவன்ட்கார்ட், லக்ன லங்கா நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கோத்தாபயவிடம் விசாரணை நடத்தப்படவேண்டும் எனவும், நிதி மோசடிகளில் கோத்தாபய ஈடுபட்டார் என்றும் ஆளும் கட்சி குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறந்த முறையில் சேவையாற்றிய அரச அதிகாரி நான்: கோத்தபாய

சிறந்த முறையில் சேவையாற்றிய அரச அதிகாரி தாமே என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

என் மீது இவ்வாறு குற்றம் சுமத்தினால் ஏனைய அரச அதிகாரிகள் நல்ல முறையில் கடமையாற்றமாட்டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் வாக்கு மூலம் அளிப்பதற்கு சென்று திரும்பிய போது ஊடகங்களுக்கு அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அவருக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி பாராட்டுக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

Related

இலங்கை 7238298468729157128

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item