ராஜபக்ச அரசின் மூன்று முக்கியஸ்தர்கள் அடுத்த சில தினங்களில் கைது செய்யப்பட உள்ளனர்
ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகித்த மூன்று முக்கிய நபர்கள் அடுத்த சில தினங்களில் நிதி மோசடி விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட உ...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_542.html

இவர்கள் சம்பந்தமான ஆரம்ப கட்ட விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதுடன் அரச பணத்தை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில், சட்டமா அதிபரின் ஆலோசனையின்படி அவர்கள் கைது செய்யப்பட உள்ளனர்.
பொது சொத்துக்களை கொள்ளையிட்டமை சம்பந்தமாக எவராக இருந்தாலும் தகுதி தராதரம் பாராது கைது செய்யுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அண்மையில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இவ்வாறான குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் வரை நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை ஒத்திவைக்குமாறும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர்.


Sri Lanka Rupee Exchange Rate