புங்குடுதீவு மாணவி கொலைச்சம்பவ சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்
யாழ் புங்குடுதீவில் பாடசாலை மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர்களான 9 பேரும் எதிர்வரும் 15 ஆம் திகதி ...


யாழ் புங்குடுதீவில் பாடசாலை மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர்களான 9 பேரும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவு பகுதியில் கடந்த மாதம் 13 ஆம் திகதி பாடசாலைக்குச் சென்ற மாணவியொருவர், கடத்திச் செல்லப்பட்டு, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட நிலையில் மறுநாள் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவத்தை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்பு நடவடிக்கைகளும், கவனயீர்ப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.