சமல் ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுகின்றார்?
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென் மாகாணசபையின் உறுப்பினர் அஜித் ர...


தென் மாகாணசபையின் உறுப்பினர் அஜித் ராஜபக்ச கொழும்பு ஊடகங்களுக்கு இதனை உறுதி செய்துள்ளார்.
சமல் ராஜபக்ச தேர்தலில் போட்டியிடாது அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ளப் போவதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
எனினும், கடந்த 7ம் திகதி சமல் ராஜபக்சவின் இல்லத்தில் நடைபெற்ற திஸ்ஸமஹாராம தொகுதி சுதந்திரக் கட்சி கூட்டத்தில், சமல் தேர்தலில் போட்டியிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கைகளுக்கு இணங்க தேர்தலில் போட்டியிட சமல் ராஜபக்ச தீர்மானித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நமால் ராஜபக்ச, வீ.கே. இந்திக்க, தென் மாகாணசபையின் ஆளும் கட்சி பிரதம கொறடா அஜித் ராஜபக்ச, தென் மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் டி.வீ. உபுல் உள்ளிட்ட சிலர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
எனினும், இந்தக் கூட்டத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ச ஆகியோர் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.