உயர்நீதிமன்ற நீதியரசர் என்ற வகையில் ஆப்ரூவுக்கு கல்கிஸ்ஸை நீதிவான் சாதகமாக நடந்துகொண்டார்!- பிரதி சொலிஸிட்டர் ஜெனரல்
உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் ஆப்ரூ சரணடைந்த விடயத்தில் கல்கிஸ்ஸை நீதிவான் ஒருபக்க சார்பாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பணிப...


பணிப்பெண் ஒருவரை பாலியல் ரீதியில் தாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சரத் ஆப்ரூ மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து அவரை கைதுசெய்யுமாறு உத்தரவிடப்பட்ட நிலையில் அவர் கல்கிஸ்ஸை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
எனினும் பின்னர் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையில், தமக்கு எதிராக குற்றச்சாட்டு தொடர்பில் சரத் ஆப்ரூ உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமைமீறல் மனு நேற்று விசாரணைக்கு வந்த போது பிரதி சொலிஸிட்டர் ஜெனரல், யஸந்த கோட்டாகொட, ஆப்ரூவின் சரண் விடயத்தில் கல்கிஸ்ஸை நீதிவான் ஆப்ரூவுக்கு சாதகமாக நடந்து கொண்டார் என்று குற்றம் சுமத்தினார்.
ஆப்ரூ உயர்நீதிமன்ற நீதியரசர் என்ற வகையிலேயே கல்கிஸ்ஸை நீதிமன்ற நீதிவான் அவருக்கு சாதகமாக நடந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் வழக்கு விசாரணை ஜூலை 14ம் திகதியன்று இடம்பெறும் என்று திகதி குறிப்பிட்டுள்ளது.