மஹிந்த கனவில் பயந்து கூச்சலிடுகின்றார்!– சரத் பொன்சேகா
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கனவில் பயந்து கூச்சலிடுவதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த ...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கனவில் பயந்து கூச்சலிடுவதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதியின் பின்னர் இந்த நாட்டில் யாரும் அச்சத்துடன் வாழவில்லை.
அனைவருக்கும் சுதந்திரம் உண்டு.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இன்று சுதந்திரம் உண்டு. எனினும், அவர் இன்று தனக்கு பாதுகாப்பு இல்லை, இல்லை என கூச்சலிடுகின்றார்.
கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி இரவு கண்ட பயங்கர கனவிலிருந்து இன்னமும் மஹிந்த மீளவில்லை.
கனவில் ஏற்பட்ட பயம் அவரைத் தொடர்கின்றது.
தனது பாதுகாப்பிற்கு 200 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் என்பதனையும் மறந்து விட்டு மஹிந்த இவ்வாறு கூச்சலிடுகின்றார்.
மஹிந்தவிற்கு கனவில் சரத் பொன்சேகா தோன்றுகின்றார், என்னை கனவில் கண்டதனால் எற்பட்ட அச்சம் இன்னமும் போகவில்லை.
இதன் காரணமாகவே விகாரைகளுக்கு சென்று எனக்கு பாதுகாப்பு இல்லை இல்லை என கூச்சலிடுகின்றார் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
குளியாப்பிட்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.