நேபாளத்தில் காணாமற்போனவர்களைக் கண்டுபிடிக்க கூகுளின் சிறப்பு தேடுதளம் அறிமுகம்

கடுமையான நிலநடுக்கத்தால் நிலைகுலைந்திருக்கும் நேபாளத்தில் காணாமற்போனவர்களைக் கண்டுபிடிக்க சிறப்பு தேடுதளம் ஒன்றினை ‘கூகுள்’ அறிமுகப்படுத்த...

நேபாளத்தில் காணாமற்போனவர்களைக் கண்டுபிடிக்க கூகுளின் சிறப்பு தேடுதளம் அறிமுகம்

கடுமையான நிலநடுக்கத்தால் நிலைகுலைந்திருக்கும் நேபாளத்தில் காணாமற்போனவர்களைக் கண்டுபிடிக்க சிறப்பு தேடுதளம் ஒன்றினை ‘கூகுள்’ அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த தளத்தில் ‘நான் இவரை தேடுகிறேன்’ (I’m looking for someone) என ஒரு பெட்டியும், ‘என்னிடம் இவரைப் பற்றிய தகவல் உள்ளது’ (I have information about someone) என ஒரு பெட்டியும் இடது-வலதுப்புறத்தில் உள்ளது.

தேடப்படும் நபரின் பெயரை இடதுபுற பெட்டியிலும், தகவல் கிடைக்கப்பெற்ற நபரைப் பற்றிய விபரங்களை வலதுபுறப் பெட்டியிலும் உலகின் எந்த மூலையில் இருந்தும், யார் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்.

இந்தத் தகவல்கள் அனைத்தும் உலகில் உள்ள எல்லா நாட்டு மக்களையும் ஓரிரு நொடிகளுக்குள் சென்று சேர்ந்துவிடும்.

எஸ்.எம்.எஸ். மூலமாகவும் இந்த பெட்டிகளுக்குள் தகவல்களை பதிவு செய்யலாம்.
நேபாளத்தில் வசிப்பவர்கள் Text ‘search ’ என பதிவிட்டு 6040 என்ற எண்ணுக்கும், இந்தியாவில் இருப்பவர்கள் Text ‘search ’ என பதிவிட்டு +91-9773300000 என்ற எண்ணுக்கும், அமெரிக்காவில் இருப்பவர்கள் Text ‘search ’ என பதிவிட்டு +1 650-800-3978 என்ற எண்ணுக்கும் எஸ்.எம்.எஸ். மூலம் பதிவு செய்து தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

Related

தொழில்நுட்பம் 7075364789007725858

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item